தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25 விழுக்காடு சலுகை - இண்டிகோ விமான நிறுவனம் - கரோனா வைரஸ்

டெல்லி: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இந்தாண்டு இறுதிவரை விமான கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

indigo
indigo

By

Published : Jul 2, 2020, 4:52 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், காற்று கூட செல்ல முடியாத பிபிஇ உடையை மருத்துவர்கள், செவிலியர்கள் அணிந்து கொண்டு பல மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே உயிரை துச்சமென நினைத்து மக்களுக்காக போராடுபவர்களுக்கு சிறப்பு சலுகையை இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2020ஆம் ஆண்டு இறுதி வரை விமான பயண கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டண பரிசோதனையின் போது மருத்துவமனை அடையாள‌ அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details