காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதனை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மிரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அடுத்த அறிவிப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அமர்நாத் யாத்ரீகர்களையும் திரும்பி செல்லுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீநகரில் உள்ள யாத்ரீகர்கள் தங்கள் ஊருகளுக்கு திரும்பி செல்ல வசிதியாக இண்டிகோ விமான நிறுவனம் தங்கள் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைத்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் டிக்கெட் விலை சலுகை பட்டியல்
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து
500கிமீ தூரம் பயணிக்கும் ஒருநபருக்கு ரூ.6,000/-
501-750 கி.மீ ரூ.7,000/-
751-1000 கி.மீ ரூ.9,000/-
1001-1300 கி.மீ ரூ.12,000/-
1,300 கிலோமீட்டருக்கு மேல் செல்வோருக்கு 15,000 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், மேலும் இந்த சலுகையானது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விமான டிக்கெட்டுகளை குறைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.