இந்தியா தற்போது பொருளாதார மந்தநிலையையும், பெருமளவிலான வேலையிழப்பையும் சந்தித்துவருவதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நாட்டின் வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற காலாண்டில் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 9.3 விழுக்காடாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு இதே காலத்தில் 9.8 விழுக்காடாக இருந்த வேலையின்மை தற்போது 0.5 விழுக்காடு குறைந்திருப்பது சற்று ஆறுதலுக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.