தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கால் 24%க்கும் மேலாக அதிகரித்த வேலை வாய்ப்பின்மை - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

டெல்லி: ஊரடங்கினால் நாட்டில் 24 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பினை இழந்துள்ளதாக இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான சிஎம்ஐஇ (CMIE) தெரிவித்துள்ளது. கடந்த வார அளவைக் காட்டிலும் தற்போது வேலை வாய்ப்பின்மையின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

indias-unemployment-rate-continue-to-remain-over-24-percent-during-lockdown-report
indias-unemployment-rate-continue-to-remain-over-24-percent-during-lockdown-report

By

Published : May 27, 2020, 5:35 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் முடக்கப்பட்டு மக்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருந்தாலும் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான சிஎம்ஐஇ (CMIE), 'கடந்த வார மதிப்பீட்டின்படி நாட்டில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் 24.0 விழுக்காடாக இருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரே வாரத்தில் வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 24.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மே 24ஆம் தேதி புள்ளிவிவரப்படி, தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 38.7 விழுக்காடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 38.8ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த மூன்று வாரங்களில் படிப்படியாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவருவதைக் காட்டுகிறது.

ஊரடங்கில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் 24 விழுக்காடாக இருந்தபோதிலும், தொழிலாளர் பங்கேற்பின் விகிதத்துடன் ஒப்பிடும்போது, சில முக்கிய மாற்றங்களை தொழிலாளர்களின் சந்தையில் ஏற்படுத்தியிருப்பது தெரியவருகிறது.

ஒருபுறம், மார்ச் மாதத்தில் 8.8 விழுக்காடாக இருந்த வேலை வாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் 23.5 விழுக்காடு உயர்ந்து 24.3 விழுக்காடாக தற்போது உள்ளது. மறுபுறம், தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 41.6 விழுக்காட்டிலிருந்து 35.6 விழுக்காடாக சரிந்துள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வந்து கொண்டுள்ளது. இதனை ஈடுசெய்யத் தொழிலாளர்கள் சந்தை மீண்டும் உத்வேகத்துடன் செயல்படவேண்டும் என்கிறது.

ஊரடங்கால் 24% மேலாக அதிகரித்த வேலை வாய்ப்பின்மை

ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட வீட்டுப்பொருள்கள் நுகர்வோர் கணக்கெடுக்கப்பின்படி, தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 மில்லியனாகக் குறைந்துள்ளது. 437 மில்லியன் மக்களில் இருந்து 369 மில்லியனாக ஒரு ஆண்டுக்குள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்த 68 மில்லியன் மக்களும் வேலை தேடுவதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், கரோனா பெருந்தொற்றை காரணமாக வைத்து பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவருகிறது.

இது இந்தியாவின் பொருளாதார நிலையை எவ்வாறு மாற்றியமைக்கும் என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: வேலைதேடும் முறையில் ஏற்பட்ட மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details