தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள 'செங்கல்' என்ற இடத்தில் சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 111.2 அடி உயரத்தில் சிவ லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகளை, சுமார் 800 பணியாளர்களை ஆலயத்தின் அருகிலேயே தங்க வைத்து நிறைவு செய்துள்ளனர். இதைப் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். சிவலிங்கத்தின் உள் பகுதியில் 8 தளங்கள் உள்ளன.
'செங்கல்' கிராமத்தில் அமைந்துள்ள சிவ பார்வதி ஆலயம் கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும், 7 வது தளத்தில் 108 சிவ லிங்கங்களும் மேல்தளமான 8ஆவது தளத்தில் கைலாய மலையில் உள்ள சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண கோலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவ லிங்கத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இந்த சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அஞ்சுகிராமம் அருகே கரை ஒதுங்கிய சிவலிங்கங்கள்...!