தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிதையும் சூரிய கனவுகள் - சிறப்புக் கட்டுரை - Economic slow down

பொருளாதார வளர்ச்சி, மின்சார தேவை ஆகியவற்றில் தற்போது நிலவும் மந்தநிலை இந்தியாவின் சோலர் போன்ற மாற்று எரிசக்தி துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பென்னார் இண்டஸ்ட்ரீஸ் இணை நிர்வாக இயக்குநர் பி.வி.ராவ் தனது கருத்துகளை ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

India's solar dreams getting shattered
India's solar dreams getting shattered

By

Published : Jan 18, 2020, 10:49 AM IST

2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாட்டின் சூரிய சக்தி திறன் 31.696 ஜிகாவாட்டை எட்டியது. இந்திய அரசாங்கம் 2022ஆம் ஆண்டிற்காக நிர்ணயித்த 20 ஜிகாவாட் திறன் கொண்ட ஆரம்ப இலக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடையப்பட்டது. 2015ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இலக்காகக் கொண்டு 2022ஆம் ஆண்டின் இலக்கு 100 ஜிகாவாட் சூரிய திறன் (மேல்கூரை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் 40 ஜிகாவாட் உட்பட) உயர்த்தப்பட்டது. சூரிய ஆலைகளை நிறுவும் நாட்டம் உள்ளவர்களுக்கு நிலம் கிடைக்க இந்தியா கிட்டத்தட்ட 42 சூரிய பூங்காக்களை நிறுவியுள்ளது.

சிதையும் சூரிய கனவுகள் 4

இந்தியா தனது சூரிய உற்பத்தி திறனை 2014ஆம் ஆண்டு மே 24ஆம் தேதியன்று 2,650 மெகாவாட்டிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி 20 ஜிகாவாட்டிற்கு எட்டு மடங்கு விரிவாக்கியது. நாடு 2015–2016ஆம் ஆண்டில் 3 ஜிகாவாட் சூரிய ஆற்றலையும், 2016–2017ஆம் ஆண்டில் 5 ஜிகாவாட்டையும் 10 ஜிகாவாட்டிற்கும் மேலாகச் விரிவுபடுத்தியது. 2017–2018ஆம் ஆண்டில் சூரிய மின்சக்தியின் தற்போதைய சராசரி விலை நிலக்கரி மூலம் கிடைக்கும் எரிபொருளின் சராசரி விலையை விட 18% ஆகக் குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் இறுதிக்குள், இந்தியா 82,580 மெகாவாட்டிற்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவியுள்ளது. இதில் 31,150 மெகாவாட்டிற்கான செயல்கள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன.

பொருளாதார வளர்ச்சி மந்தநிலை, அதிக மின்சார தேவை இரண்டும் சேர்ந்து இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆழ்ந்த அழுத்தத்தைத் தருமளவிற்கு மோசமாக்கியுள்ளது. செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2022ஆம் ஆண்டில் புதைபடிவமற்ற எரிபொருள் சக்தியின் 450 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ.) அளவிற்கு உயர்த்த ஒப்புக்கொண்டிருப்பதாக அறிவித்தார். இதன்மூலம், அவரது சொந்த அரசாங்கம் 2018இல் நிர்ணயித்த 175 ஜிகாவாட் பசுமை ஆற்றலின் ஆரம்ப இலக்கை விட இரட்டிப்புக்கும் மேலாக்கியது. காலநிலை மாற்றம் போன்ற கடுமையான சவாலை வெல்லவேண்டுமெனில் , இப்போது நாம் செய்து கொண்டிருப்பது போதுமானதாக இல்லை.

சிதையும் சூரிய கனவுகள் 1

எவ்வாறாயினும், நமது நாட்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்துறையில் மோடியின் நம்பிக்கை தோற்றுக்கொண்டிருப்பதே யதார்த்தம். இந்தியாவின் நிறுவப்பட்ட பசுமை ஆற்றல் திறன் இன்று சுமார் 65 GW (ஜிகாவாட்) ஆக உள்ளது. இது 2022 டிசம்பருக்குள் 100GWஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இது நிச்சயமாக அரசாங்கத்தின் 175GW இலக்கைக் காட்டிலும் குறைவானதுதான். மேலும் இது 450GW ஐ விட மிகக் குறைவு. ஆனால் எதிர்பார்க்கப்படும் 2022க்கான திட்டமே கூட சற்று மிகையானதாகவே தோன்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, நிலக்கரி விலைகள் அதிகரித்து வருவதாலும், உள்நாட்டுச் சந்தையிலிருந்து இயற்கை எரிவாயு காணாமல் போனதாலும் மின்னிலைங்கள் எரிசக்தி உற்பத்திக்கான சாதக நிலை மெதுவாக குறைந்துபோனதால் எல்லோரும் பசுமை ஆற்றல் உற்பத்தியில் இறங்கவே விரும்பினர். பசுமை ஆற்றலில் புதிய முதலீடுகளில் பெரும் பகுதி சூரிய மின்சக்திக்கான சிலிக்கான் பேனல்களில் சென்றது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் அந்த வேகம் இப்போது தொய்ந்து போயிருக்கிறது.

சிதையும் சூரிய கனவுகள் 2

இந்தியாவில் சூரிய ஆற்றல் கட்டணங்கள் உலகிலேயே மிகக் குறைவானவை. ஆனால், மாநில அரசுகள் அவற்றை மேலும் கீழே தள்ள ஆர்வமாக உள்ளன. இந்த ஆபத்தான குறைந்த கட்டணங்கள் சில உருவாக்குவோருக்கு நெடுநாள் நீட்டிக்க முடியாதவை, அதனால் அவர்கள் தரத்தில் கைவரிசை காட்ட முற்படுகின்றன. சில மாநில மின் விநியோக நிறுவனங்களும் (டிஸ்கோம்கள்) தங்கள் மின் கட்டணங்களைச் செலுத்துவதில் ஒரு வருடம் தாமதமாக்குகின்றன.

ஆந்திராவில் டெவலப்பர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் ஆந்திர அரசு அவர்களை இரண்டு சமமான விரும்பத்தகாத நிலைப்பாடுகளின் பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறது. ஒன்று முந்தைய அரசாங்கம் ஒப்புக்கொண்ட கட்டணங்களைக் குறைத்தல், இரண்டு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துதல் ஆகும். ஒரு காலத்தில் இந்தத் துறையில் ஒரு நிலையான முதலீடு இருந்த இடத்தில், அந்த வழி இப்போது அடைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆற்றல் உருவாக்குநர்கள் (ஐபிபிக்கள்) மந்தநிலையை ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள. ஆனால் அதற்கான அறிகுறிகள் எல்லா இடங்களிலும் உள்ளன.

சிதையும் சூரிய கனவுகள் 9

நிதியாண்டு 2019இல் மத்திய, மாநில அரசுகளால் ஏலம் விடப்பட்ட 64GWஇல், 26 விழுக்காடு பேர் மந்தமான ஏலங்களைப் பெற்றனர். மேலும் 10% ஏலங்கள் ரத்து செய்யப்பட்டன. மாநிலங்கள் செலுத்தத் தயாராக இருக்கும் கட்டணங்கள் ஒரு யூனிட்டுக்கு 2.50 முதல் 2.80 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது லாப வரம்புகளை மேம்படுத்துவதற்கும் தரமான திட்டங்களை மேம்படுத்துவதற்கும் ஐபிபிக்களுக்கான வழிமுறையைக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த நான்கு மாதங்களில், 11 காற்று மற்றும் சூரிய ஆற்றல் திட்ட ஏலங்கள் நடந்துள்ளன. இந்த ஏலங்களில் இரண்டு மட்டுமே முழுமையாகப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. இந்தத் துறை எதிர்கொள்ளும் பிரச்னைகள் எதுவும் எப்போது வேண்டுமானாலும் விரைவில் போய்விடுவது போல் தெரியவில்லை. எனவே ஏல நிச்சயமற்ற தன்மை நீடிக்கக்கூடும். தரையில் இருந்து கிளம்பிய திட்டங்களில் கூட, செயல்பாட்டு வேகம் வியத்தகு முறையில் குறைந்துவிட்டது. இந்த மந்தநிலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைமட்டுமின்றி பரந்துபட்ட பொருளாதாரத்திலும் தொடர்ந்தால், அது இந்தியாவின் ஆற்றல் மாற்றுத் திட்டங்களைப் பாதிக்கும்.

பொருளாதாரம் புத்துயிர் பெறாவிட்டால் தூய்மையான எரிசக்தி இலக்கைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட மாட்டோம். அது முன்னுரிமைகள் பட்டியலில் கீழே நகர்ந்துவிடும். இது மின் துறையில் இருப்பவர்களின் குறுகிய நலன்களுக்கு அப்பாற்பட்ட சிற்றலை விளைவுகளை ஏற்படுத்தும். சூரிய சக்தி தலைவர் குழுவில் (சோலார் லீடர் போர்டில்) உள்ள நாடுகள் கிட்டத்தட்ட அனைத்தும் சூரிய அடிப்படையிலான சுயாதீன (ஐபி) உற்பத்தி மற்றும் நெறிப்படுத்துதல் ஆகியவற்றில் இணையான வளர்ச்சியைக் கொண்டுள்ளன.

சிதையும் சூரிய கனவுகள் 7

ஆனால் இந்தியாவில் நாம் நேராக நெறிப்படுத்தலில் முனைந்ததால் இது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சீனா மற்றும் வியட்நாம் போன்ற உலகளாவிய நாடுகளைச் சார்ந்திருக்கும் படியான இயலாமையை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் ஆற்றல் மாற்றம் குறைந்து அல்லது தாமதமாகும்போது அந்தச் சார்பு மேலும் வளரும். ஜெர்மனியின் ஆற்றலில் கிட்டத்தட்ட 46% ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வருகிறது. சீனாவில் கூட, அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 26% ஐ தாண்டியது. உலகெங்கிலும் உள்ள எரிசக்திக் கலவை ஆற்றல்மிக்க பொருளாதாரங்கள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் மாறப்போகிறது என்றால், இந்தியா பின்தங்கிவிடும் அல்லது எட்டுவது தாமதப்படுகிற விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க: வாழ்வதற்கான உரிமையை உறுதிபடுத்துமா நகராட்சி அமைப்புகள்?

ஜூலை மாதம், ஆந்திராவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், மாநிலத்திற்கு மின்சாரம் வழங்கும் சூரிய மற்றும் காற்றாலை ஐபிபிக்கள் தங்கள் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (பிபிஏ) ரத்து செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்று அறிவித்தார். அந்த அச்சுறுத்தலின் அளவைப் புரிந்துகொள்ள, 7.7GW உற்பத்தி இந்தியாவின் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தியில் 9.6% ஐ வாங்குகிறது என்பதை கவனியுங்கள்.

சிதையும் சூரிய கனவுகள் 6

வடக்கில் குஜராத்தை போலவே, ஆந்திராவும் அதுவரை தொழில்துறையின் வளர்ச்சியை வழிநடத்தியது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட குழுவில் ஒன்று, கடைசியாக 6 பில்லியன் டாலர் மதிப்புடைய இறையாண்மை முதலீட்டாளர்களான அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் சிங்கப்பூரின் ஜி.ஐ.சி. போன்றவற்றின் ஆதரவுடன், அவர்களின் ஆலைகளை அங்கே அமைக்க ஊக்குவிக்கப்பட்டது.

வேறு சில ஐ.பி.பி.கள் பின்தொடர்ந்தன. கடன் மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், ஆந்திராவின் முடிவு அதன் நிறுவப்பட்ட சக்தியின் 5.2GW ஐ பாதிக்கிறது, இது, 21,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள கடனைத் திருப்ப முடியாத அளவிற்குத் தள்ளும் என்றும் மதிப்பீடு செய்தது. இதனால் மாநில மின்விநியோக அமைப்புகள் வங்கிகளுக்குத் திருப்பும் கடன்தொகைகளைத் தாமதப்படுத்த நேரும் என்பதால் மாற்றுத் திட்டங்களுக்கான கடன் தொகை 10,600 கோடி ரூபாய் திருப்ப முடியாத ஆபத்தான கட்டத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்யாம லிருப்பதின் நன்மைகளை மட்டும் பிரசங்கிப்பதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு வசதி செய்ய வேண்டும்.

மாநில மின்சார வாரியங்களை திவாலாக்கிய பொறுப்பற்ற ஜனரஞ்சகத்தை ஊக்குவித்ததிலிருந்து மின் துறை இருக்கும் சோகமான நிலை உருவானதில் மத்திய அரசு குற்றமற்றது என்று கூற இயலாது. 2014 - 2019 முதல் கையெழுத்திடப்பட்ட பிபிஏக்கள் அவை மாநிலத்தின் கட்டாய 5% புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் உறுதிகளுக்கு மிகையானவை என்பதே மாநிலங்களிலன் வாதமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 2017 ஆம் ஆண்டில் திட்டங்களை வழங்குவதற்கான போட்டி ஏலம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, மாநிலங்கள் ஒரு ஃபீட்-இன் கட்டணம் எனப்படும் நிலையான கட்டணத்தை நிர்ணயித்து உருவாக்குபவர்களை அழைத்தன.

சிதையும் சூரிய கனவுகள் 5

ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் ஆலைகள் ஒரு யூனிட் (கிலோவாட் அவர்) ஒன்றுக்கு ₹5.74 க்கு விற்கப்படுகின்றன, இது தற்போதைய சூரிய கட்டணத்தை ஒரு கிலோவாட்டடுக்கு 2.44 டாலராகக் குறைக்கும் போது தற்போதைய விநியோகத்தைப் பாதிக்கிறது. மாநில டிஸ்கோம்களின் நிலுவைத் தொகை குவிந்து வருவதும் மேலும் நெருக்கடியை உருவாக்கப் போதுமான அறிகுறிகளாக உள்ளன.

மத்திய மின்சார ஆணையத்திடமிருந்து கிடைத்த சமீபத்திய தரவுகளான ஜூலை 2019 நிலவரப்படி, மாநில டிஸ்கோம்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு 9,735.62 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளன. இதில்,, 6,500 கோடி ரூபாய் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து மட்டுமே வரவுள்ளது. மிக மோசமான குற்றவாளிகளான ஆந்திரப் பிரதேச டிஸ்காம்கள் 13 மாதங்களுக்கும் மேலாக தங்கள் நிலுவைக் கடன் தொகையை செலுத்தவில்லை.

டிஸ்கோம்களிடமிருந்து பணம் செலுத்துவதில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இதுவரை நாம் எதை அடைந்துள்ளோமோ அது ஒரு பெரிய சாதனைதான். ஆனால் எரிசக்தி துறையின் தலைவிதி டிஸ்கோம்களை சரிசெய்வதில் தொங்குகிறது.

மற்ற மாநிலங்களிலும் கொள்கை மாற்றங்கள் திடீரெனவும் கணிக்க முடியாதவையாகவும் இருந்துள்ளன. ஆந்திராவில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு, உத்தரபிரதேசம் பழைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்களை மாற்ற மீள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது. கடந்த ஆண்டு மாநில டிஸ்காமுக்கு மின்சாரம் வழங்கும் திட்டங்கள் மட்டுமே மாநிலத்திற்குள் நிலத்தைப் பயன்படுத்த முடியும் என்று குஜராத் முடிவெடுத்தது.

இது மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பின் கீழ் திட்டங்களை அமைப்பதற்கான மத்திய கொள்முதல் நிறுவனத்தின் விதியை மீறுகிறது. சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மிகவும் விரும்பப்படும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான், மாநிலத்திற்கு வெளியே மின்சாரம் விற்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஒரு மெகாவாட்டிற்கு 2.5 முதல் 5 லட்சம் ரூபாய் விதிக்கும் முடிவை சமீபத்தில் அறிவித்தது.

சூரிய ஆற்றல் திட்டத்தில் பல மறைமுக அபாயங்கள் உள்ளன. செலாவணி ஆபத்து உள்ளது, ஏனெனில் இறக்குமதி செய்யப்படுகின்ற சிறுபாகங்களின் தொகுதியின் விலை மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இருப்பினும் சில மாநிலங்களில் ஒழுங்கு நடைமுறை சிக்கல்கள் மற்றும் கடன் நிதி கிடைக்காமை ஆகியவையே பெரிய சவால்களாகும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இதுவரை தனியார் பங்குச்சந்தை ஈக்விட்டி (PE) முதலீடுகளால் தூண்டப்பட்டாலும், இப்போது முதலீட்டை ஈர்க்கக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பங்குச்சந்தை முதலீடு 2018 ( 1.93 பில்லியன்) மற்றும் 2019 ( 1.8 பில்லியன், இன்றுவரை) உயராமலே உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பெரிய வங்கிகள் இனி ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய்க்கும் குறைவாக மின்சாரம் விற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கடன் கொடுப்பதில்லை. பெரும்பாலான கடன் வழங்குநர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்ட வெளிப்பாடுகளின் ஆரோக்கியம் குறித்து பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.

ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஒப்பந்தங்களை குறைத்து வருவதோடு, டிஸ்கோம்களின் ஆரோக்கியமும் எப்போதையும் போலவே மோசமாக இருப்பதால், பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள் செயல்பாட்டு மூலதன அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இப்போது, யாராவது கடன் கொடுக்கும்போது, அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா அல்லது உத்தரப்பிரதேசத்தில் திட்டங்களை எடுக்க விரும்பவில்லை. திட்டங்களின் பிரதிக் கட்சிகளாக இருக்கும் இவைகளின் கடன் திருப்பிக் கொடாமை தொடர்பான அபாயத்தை எதிர்கொள்வதைப் பார்க்கிறார்கள்.

ஆனால் அதிகரித்து வரும் அபாயங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மைக்கு அப்பால், இந்தியாவில் சூரிய ஆற்றல் நிறுவனங்களின் தரமும் அதிகரித்து வருகிறது, அவற்றில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து மலிவான பேனல்களைத் பயன்படுத்துகின்றன. பல்வேறு மாநிலங்களில் சூரிய ஆற்றல் நிறுவல்களின் செயல்திறன் குறித்த தரவுகளுக்கான அணுகல் நம்மிடம் உள்ளது, மேலும் இந்திய உறுவாக்குப்பவர்கள் பயன்படுத்தும் சூரிய உதிரித் தொகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான சீரழிவு அளவைக் காட்ட போதுமான தரவு கிடைக்கிறது.

வழக்கமாக, சராசரியாக ஆண்டு சீரழிவு விகிதம் 0.8% என்று கருதுகிறோம். அதாவது, நிறுவப்பட்ட சூரிய ஆலையிலிருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் செயல்பாட்டில் 0.8% குறைகிறது. ஆனால் ஒரு ஆலையின் நான்காவது அல்லது ஐந்தாம் ஆண்டு செயல்பாட்டிற்குப் பிறகு, சராசரி வருடாந்திர சீரழிவு 2-3% வரை அதிகமாக இருப்பதை நாங்கள் இப்போது கவனிக்கிறோம்.

ஒளிமின்னழுத்த (பி.வி) தொகுதி நம்பகத்தன்மை குறித்து ஐ.ஐ.டி மும்பையின் வல்லுநர்கள் குழு நடத்திய 2016 அகில இந்திய ஆய்வில், இந்தியாவில் சூரிய தொகுதிகளின் தரம் மற்றும் சீரழிவு விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடு காணப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் பி.வி. ஆலைகளுக்கு மிகவும் கடுமையான விலை நிர்ணயம் மற்றும் காலக்கெடுவை வழங்குவதன் விளைவாக சூரிய பி.வி கலங்களில் தரம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு எச்சரித்தது. உற்பத்தியாளர் பற்றிய விவரங்களைச் சரிபார்க்கவும், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தொகுதிகளின் தரம் குறித்த தனிப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தொகுதிக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கும் போது உரிய அறிவுக் கூர்மையுடன் செயல்பட வேண்டும் என்று அது எச்சரித்தது.

இந்தியாவில் ஆலைகளை அமைக்கும் போது இந்திய டெவலப்பர்கள் அடுக்கு -1 தள உற்பத்தியாளர்களை அரிதாகவே பயன்படுத்துகின்றனர். ஒரு உயர்தர அடுக்கு -1 தள உற்பத்தியாளர் 7 ஆண்டுகளுக்குப் பிறகும் 0.8-0.9% மட்டுமே குறையும், ஆனால் இவற்றில் பல இந்தியாவில் பயன்படுத்தப்படுவதை நாம் காணவில்லை. இந்திய ஐபிபிக்கள் இரண்டாம் நிலை அல்லது மோசமான தரமான அடுக்கு -1 சீன உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகின்றன, அவை தொகுதிகளை அமெரிக்காவிற்கு 30 செண்டுகள் வரை ஆனால் இந்தியாவுக்கு 22 செண்டுகள் என்றே விற்கின்றன. எனவே, தரம் மாறுபடும்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தொகுதிக் கூறுகள் குறித்த அரசாங்க தர விதிமுறைகள் விரிவானவை அல்ல. இந்த தொகுதிக் கூறுகளில் பயன்படுத்தும் சிலிக்கானின் தூய்மையை யாரும் சரிபார்க்கவில்லை. ஐபிபிக்கள் சந்தையில் கிடைக்கும் சிறந்த தரமான தொகுதிக்கூறுகளைப் பயன்படுத்தினால், இப்போது நாம் காணும் மலிவான கட்டணத்தில் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய இயலாது.

இறுதியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்த அழுத்தத்தின் பெரும்பகுதி என்னவென்றால், குறிப்பாக அதிக எரிசக்தி நுகரும் தொழில்களில் இருந்து மின் தேவையின் வளர்ச்சி விகிதம் எல்லோரும் எதிர்பார்த்ததை விட மெதுவாகவே உள்ளது. மத்திய மின்சார ஆணையத்தின் தரவு அகில இந்திய மின் தேவையைக் காட்டுகிறது இந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் வளர்ச்சி 4.4% ஆக குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 6% ஆக இருந்தது.

பொருளாதாரம் ஒரு சீராக வளர்ந்து, மின்சாரத் தேவை அதிகரித்துக்கொண்டிருந்தால், இந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கமுடியாது. இன்று, டிஸ்காம்கள் விலையுயர்ந்த சக்தியை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் அரசியல் அழுத்தங்கள் நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்துவதைத் தடுக்கின்றன. அதிக மின்சாரம் தேவைப்படாவிட்டால், சிற்றலை விளைவு நீண்ட கட்டண சுழற்சிகள் மற்றும் மாநிலங்களுக்கும் உற்பத்தியாளர்கட்கும் இடையில் மோதல்கள் அதிகமாகும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வரை இது மாறப்போவதில்லை.

இறக்குமதியில் கிட்டத்தட்ட 90% இருக்கும் தற்போதைய சார்புநிலையை குறைக்க சொந்த வலுவான உற்பத்தி தள சூரியசக்தி பேனல்களுக்கான தேவை உள்ளது. இறக்குமதிக்கு பணம் செலுத்துவதிலும், அந்நிய செலாவணியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதிலும் மதிப்புமிக்க அந்நிய செலாவணியை இழந்து வருகிறோம். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சரியான உகந்த சூழல் வழங்கப்பட்டால், இது இழப்பைக் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்துவிடும்.

இந்தத் துறை தொடர்ந்து வலுவாக வளர்ந்துவருவதை உறுதிசெய்ய சில கொள்கை மற்றும் செயல்படுத்தல் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. தற்காலிக மற்றும் திடீர் கொள்கை மாற்றங்களை விட, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க முற்படும் வளர்ந்து வரும் துறைக்கு வேறு எதுவும் இடையூறாக இருக்க முடியாது. இந்தத் துறையில் தொடர்ச்சியான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை உறுதிசெய்ய ஏலச் செயல்பாட்டின் புனிதத்தன்மையைப் பராமரிப்பது முக்கியம் மற்றும் இந்தத் துறையில் பிபிஏ. உறுவாக்குநர்களுக்கான தொடரும் ஈடுபாட்டை உறுதிசெய்ய வேண்டும்.

டெஸ்காம்கள் உருவாக்குபவர்களுக்குப் பணம் கட்டுவதைப் பல மாதங்கள் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்கள் டெஸ்காம்களின் நிதி பலவீனத்துடன் நேரடியாக தொடர்புடையவை. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் மெல்லிய லாப நோக்கு மற்றும் சிறிய மூலதனத்தில் இயங்குகின்றன, மேலும் இந்தச் சிக்கல்கள் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டால் அவற்றின் சீரான வளர்ச்சிக்குப் பாதிப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரிதான் எரிபொருள்

ABOUT THE AUTHOR

...view details