தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி பயணிப்போம் - பிரதமர் மோடி - பாதுகாப்புத்துறை உற்பத்தி

பாதுகாப்பு துறையில் இறக்குமதியைக் குறைத்து தற்சார்பை உறுதி செய்யும் நோக்கில் அரசின் செயல்திட்டங்கள் இனி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Modi
Modi

By

Published : Aug 27, 2020, 8:51 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சீர்செய்ய, ’தற்சார்பு இந்தியா’ என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளில் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளை அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன் முக்கிய அம்சமாக பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்திக்கு அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான பாதுகாப்பு அமைச்சக கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ”பாதுகாப்புத் தளவாடங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிக அளவிலான தளவாடங்களைப் பயன்படுத்தும் இந்தியாவில், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள்” எனக் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டது, புதிய பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய மோடி, அனைவருக்கு சமமான பங்களிப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் தொழில்துறை ஏற்றம் கண்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இந்தியா முன்னேறும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துளார்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் முக்கிய ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details