தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடியை இழந்த சில்லறை வர்த்தகம்' - 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது

டெல்லி: கரோனா தொற்றின் காரணமாக சில்லறை வர்த்தகம் கடந்த 100 நாட்களில் 15.5 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

cait
cait

By

Published : Jul 21, 2020, 9:59 AM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நுகர்வோர் மிகவும் குறைந்த அளவிலே பொருள்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம், பல ஊழியர்கள் ஊரடங்கால் சொந்த ஊர்களில் சிக்கியுள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருப்பதால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மிகுந்த மனச்சோர்வடைந்துள்ளனர்.‌ கடந்த 100 நாள்களில் மட்டும் சில்லறை வர்த்தகம் 100 கோடி ரூபாயை இழந்துள்ளது. பல்வேறு துறைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இச்சமயத்தில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்தவொரு ஆதரவும் வர்த்தகர்களுக்கு கிடைக்கவில்லை" எனக் குற்றச்சாட்டுகின்றனர்.

இதைத் தொடர்ந்து பேசிய அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பிரவீன் கூறுகையில், "நடப்பாண்டில் நாட்டின் உள்நாட்டு வர்த்தகம் மிக மோசமான காலகட்டத்தை கடந்து வருகிறது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இந்தியாவில் சுமார் 20 விழுக்காடு கடைகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூட்டமைப்பு சார்பில் வர்த்தகர்களுக்கு வணிகக் கடன்களை வழங்குவதற்கும், வரி செலுத்துவதில் தளர்வு, வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலப்பகுதியில் நீட்டிப்பதற்கான வழிமுறைகளை வடிவமைக்கவுள்ளோம். மேலும், வட்டி அல்லது அபராதம் இன்றி ஈ.எம்.ஐ.களும் தேவைப்படுகின்றன மற்றும் நிதி பணப்புழக்கத்தை வழங்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details