அமெரிக்காவில் ஏழுநாள் சுற்றுப் பயணத்தைமுடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாடு திரும்பினார். தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் டெல்லி பாஜக எம்.பி.க்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கு பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், "கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தியா மீது மற்ற நாடுகள் வைத்திருந்த மதிப்பும், ஆர்வமும் கணிசமாக கூடியுள்ளதை என் பயணத்தின் போது உணர்ந்தேன். அறுதிப் பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவிய 130 கோடி இந்தியர்கள் தான் இதற்குக் காரணம்.
அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குடியரசு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். அத்துடன், அலைகடலென இந்தியா வம்சாவழியினரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ஹவுடி மோடி!: ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த மோடி...! - ஆர்ப்பரித்த மக்கள்