நாட்டின் மிகச்சிறந்த பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பத்து வருட கடின உழைப்பிற்குப் பிறகு, ரோஹ்தாங் அடல் சுரங்கம் இப்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இந்த சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான யோசனை சுமார் 160 ஆண்டுகள் பழமையானது. இது இந்த ஆண்டு முதல் செயல்படப் போகிறது.
உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை: மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதை பணி இறுதியாக 10 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்துள்ளது. முதலில் இது 6 ஆண்டுகளில் தயார் செய்யப்படும் என திட்டமிடப்பட்டது. பின்னர் மேலும் 4 ஆண்டுகள் நேரம் தேவைப்படும் என கூறப்பட்டது. இந்தநிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, அக். 3ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையை வடிவமைத்த ஆஸ்திரேலிய நிறுவனமான ஸ்னோவி மவுண்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (எஸ்.எம்.இ.சி) வலைத்தளத்தின்படி, ரோஹ்தாங் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதல் யோசனை மொராவியன் மிஷன் 1860இல் முன்வைத்தது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை, கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது.
அடல் சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் நீளமானது. இது மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ. குறைக்கும்.
மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கம் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமாகும். ஒவ்வொரு 60 மீட்டருக்கும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சுரங்கப்பாதையின் உள்ளே ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசரகால வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை காரணமாக, மணாலி முதல் லே வரையிலான தூரம் 46 கி.மீ. குறைக்கப்படும், இது 4 மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்.