கோவிட்-19 பரவைலக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் வெறும் ஐந்து விழுக்காடாக மட்டுமே உள்ளது.
மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை இந்திய ரயில்வே எடுத்துவருகிறது. குறிப்பாக, சரக்கு ரயில் சேவைகளில பல புதிய சாதனைகளையும் ரயில்வே துறை படைத்துவருகிறது.
இந்நிலையில், புதிய மைல்கல்லாக 251 பெட்டிகளுடன் கூடிய 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சரக்கு ரயிலை இந்தியன் ரயில்வே தற்போது இயக்கியுள்ளது. ஷேஷ் நாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் தென் கிழக்கு ரயில்வே துறை சார்பில் இயக்கப்பட்டுள்ளது.