இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தித் திட்டமானது மேகாலயாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக என்சிடிசி (தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்) சார்பில் 209 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செப்.09), இந்தத் திட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி மேகாலயாவில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தி திட்டம் இதுகுறித்து மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா கூறுகையில், "இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிக்கான மிஷன் என்ற பெருமைக்குரிய தருணம் மேகாலயாவில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரியால் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது ஆத்மா நிர்பரை நோக்கிய ஒரு படியாகும்" என்றார்.
மேலும், என்சிடிசி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "இந்தத் திட்டம் மேகாலயாவில் உள்ள 35,000 பன்றி விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வேலையில்லாத 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வாழ்வாதாரமாக அமையும். இது 300 பிஏசிசிஎஸ் (முதன்மை வேளாண்கூட்டுறவு கடன் சங்கங்கள்) உறுப்பினர்களுக்கு வழக்கமான வருமான ஆதாரத்தை வழங்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.