தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் நீர் நெருக்கடியில் எந்த தவறும் செய்யாதீர்கள்

நிலத்தடி நீர் வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வரைவு விதிகளை மத்திய நீர்வள அமைச்சகம் 2017 அக்டோபரில் கொண்டு வந்தது. ஆகஸ்ட் 2019-ல், ஜல் சக்தி அபியான் 256 மாவட்டங்களில் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறுவதற்குள், இந்த பாதுகாப்பு முயற்சிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

impending water crisis
impending water crisis

By

Published : Sep 9, 2020, 6:29 AM IST

சுதந்திர இந்தியாவின் எழுபது ஆண்டுகளில் பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்றும், நாட்டின் மக்கள் தொகையில் 85 விழுக்காடு மக்கள் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை நம்பியுள்ளனர். விவசாயிகளும் நிலத்தடி நீரை பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீர் என்பது ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்தபோதிலும், நம் நாட்டில் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட, சுரண்டப்படும் வளமாகும். மழை நீர் சேகரிப்பு மோசமாக இருப்பதால், ஒரு ஆண்டில் பெய்யும் மழையில் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்க முடிகிறது. இதன் விளைவாக, நிலத்தடி நீர் மட்டம் உயராததால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.

இந்தியாவில் தற்போது கிடைக்கும் தனிநபருக்கான நீரின் அளவு, 2025ஆம் ஆண்டில் 25 விழுக்காடு அளவு குறையும் என்றும், 2035ஆம் ஆண்டில் ஆபத்தான அளவைத் தொடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் நிலைமையை சரியாக மதிப்பிட்டு நீர் பயன்பாட்டை மேம்படுத்த ஒரு கட்டமைப்பை உருவாக்கியது. இந்த நீர் பாதுகாப்பு பணியில் பங்கேற்குமாறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள் மற்றும் நீர் வாரியங்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டதுடன், நீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டது.

நிலத்தடி நீர் வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வரைவு விதிகளை மத்திய நீர்வள அமைச்சகம் 2017 அக்டோபரில் கொண்டு வந்தது. ஆகஸ்ட் 2019-ல், ஜல் சக்தி அபியான் 256 மாவட்டங்களில் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறுவதற்குள், இந்த பாதுகாப்பு முயற்சிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் இந்தியாவின் தண்ணீர் மனிதருமான ராஜேந்திர சிங் கூறுகையில், நாட்டின் நிலத்தடி நீர் வளங்களில் 72 விழுக்காடு சரிசெய்ய முடியாத அளவுக்கு குறைந்துவிட்டது. அமெரிக்காவின் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமான லேக் மீட்-டை நிரப்ப தேவைப்படும் நீருக்கு சமமாக பத்து அடி வரையிலான நிலத்தடி நீரை இந்தியா பல ஆண்டுகளாக இழந்து வருகிறது என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. கண்மூடித்தனமாக ஆழமான போர்வெல்களை அமைப்பது நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலைமைகளுக்கு வழிவகுத்ததாக மிஹிர் ஷா குழு தெரிவித்துள்ளது.

தனியார் குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் மீது மாநில அதிகாரிகள் தகுந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் பரிந்துரைத்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒவ்வொரு துளி மழையையும் சேமித்து வருகின்ற அதே வேளையில், நீர்வளங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நீதிமன்றங்கள் நமக்கு அறிவூட்டுவதற்கு நாம் காத்திருக்கிறோம்.

இங்குள்ள பல லட்சம் மக்களுக்கு மாதக்கணக்கில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நிலையில் 90 விழுக்காடு மழைநீர் கடலில் வீணாக கடலில் பாய்கிறது.

ஆனால் அனைத்தையும் இழக்கவில்லை. உதாரணமாக தெலுங்கானாவை எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளுக்கு மிஷன் பாகீரதா எனப்படும் பாதுகாப்பான குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மாநில அரசு அனைத்து முக்கிய நீர்நிலைகளையும் நீர்த்தேக்கங்களையும் நிரப்பி, அதன் விளைவாக ஆண்டு முழுவதும் தாராளமாக நீர் வழங்க முடிகிறது.

மற்ற மாநிலங்களும் இந்த முயற்சியைப் பின்பற்ற வேண்டும். நீர் வளங்களை மீட்டெடுப்பது என்பது சிறந்த பயிர் சாகுபடியை உறுதி செய்யும். பாரம்பரிய பயிர்களான நெல், கரும்பு போன்றவற்றிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை பரிந்துரைக்கலாம். பொதுமக்களும் நீர் பாதுகாப்பிற்கான தங்கள் பங்கை செய்ய வேண்டும். மாணவர்களின் பாடத்திட்டத்தில் நீர் பற்றிய பாடங்களை அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும். வரவிருக்கும் நெருக்கடியைத் தவிர்க்க, நீர் பாதுகாப்பை ஒரு தேசிய திட்டமிடலாக மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details