நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஈரான் நாட்டிலுள்ள சபஹர் துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள சாஹிதான் நகரம் வரை ரயில் பாதையை அமைக்க அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், திட்டத்தைத் தொடங்குவதற்கான நிதியை அளிப்பதில் இந்தியா தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை இந்தியாவின் உதவியில்லாமல் தொடங்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவின் உலகளாவிய வியூகம் கிழித்தெறியப்பட்டுள்ளதாகவும் நாடு தன் மதிப்பையும் வலிமையையும் அனைவர் இடத்திலும் இழந்துவருவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.