தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் முதல் வாக்காளர் நேகிக்கு சுகாதாரக் குழு மருத்துவ சிகிச்சை - national news in tamil

இமாச்சலப் பிரதேசம்: இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகிக்கு உடல்நிலை சரில்லாததால் கல்பாவில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு குழு அவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறது.

Shyam Saran Negi taken ill
Shyam Saran Negi taken ill

By

Published : Jan 9, 2020, 8:20 AM IST

இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நேகி (103) சுதந்திர இந்தியாவின் தேர்தலில் வாக்களித்த முதல் நபர் ஆவார். இதன் காரணமாக அவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் தூதராக நியமிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு வயதுமூப்புக் காரணமாக உடல்நலம் குன்றியது.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விபின் சிங் பர்மர், நேகிக்கு அவரது இல்லத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கின்னார் தலைமை மருத்துவ அலுவலருக்கு (Kinnaur Chief Medical Officer - CMO) உத்தரவிட்டார்.


அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு குழு அவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறது.

இதையும் படிங்க: தனியார் ரயில்கள் இயக்கத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்க திட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details