தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரோஜாவின் ராஜா நேருவின் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை - Nehru birth

டெல்லி: பாரத திருநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்துவருகின்றனர்.

Nehru memorial

By

Published : Nov 14, 2019, 8:53 AM IST

நாட்டின் முதல் பிரதமரும் ஐந்தாண்டுத் திட்டத்தின் நாயகனுமான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அவரின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், அவரின் பிறந்தாள் இன்று நாட்டில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அவரது நினைவிடத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமிது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Jawharlal Nehru memorial

மேலும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செய்துவருகின்றனர்.

Jawharlal Nehru memorial

நேருவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் அனைவரும் முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details