தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகமதாபாத்தில் இந்தியாவின் முதல் ப்ளாஸ்மா வங்கி! - குஜராத் கொரோனா

அகமதாபாத்: நாட்டிலேயே முதன்முறையாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ப்ளாஸ்மா வங்கி குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

ப்ளாஸ்மா வங்கி
ப்ளாஸ்மா வங்கி

By

Published : Jul 2, 2020, 9:40 AM IST

இந்தியாவின் முதல் ப்ளாஸ்மா (ஊநீர்) வங்கி அகமதாபாத் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கரோனா நோய்க் கிருமித் தொற்றிலிருந்து மீண்ட 30 பேர் தங்களின் ரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மாக்களை தானம் செய்துள்ளனர்.

இதன் மூலம் அதிதீவிர சிகிச்சை தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கரோனா தாக்கத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது குஜராத் மாநிலம். அதுவும் இங்கு இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது.

மேலும், அங்கு அவசர நோயாளிகளுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு பல நோயாளிகள் இறந்தனர் என்று சர்ச்சைகள் கிளம்பி மறைந்ததும் நாம் மறந்திருக்க முடியாது.

ABOUT THE AUTHOR

...view details