இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6.5 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விரைவில் குறைக்க முடியும்.
பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தேசிய சராசரியைவிட அதிகளவு கரோனா பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றன. அதுமட்டுமின்றி, சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, பிறரும் தொற்றால் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துகின்றன.