தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் உயிரிழப்புகளின் விகிதம் 2.80 விழுக்காடாக குறைவு!

டெல்லி: நாட்டில் கரோனாவால் உயிரிழப்புகளின்  விகிதம் 2.80 விழுக்காடாக குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India's COVID-19 fatality rate drops to 2.80%
India's COVID-19 fatality rate drops to 2.80%

By

Published : Jun 4, 2020, 2:39 AM IST

நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இப்பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டத் தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 776 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இப்பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு சிறந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, நாட்டில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் 2.80 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 41,03,233 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பரிசோதனை செய்ய நாடு முழுவதும் மொத்தம் 681 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 476 அரசு ஆய்வகங்களும், 205 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி, நாட்டில் 1,66,332 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,393 ஐசியூ படுக்கைகள், மற்றும் 72 ஆயிரத்து 762 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட 952 பிரத்யேக கரோனா மருத்துவமனைகள் உள்ளதாக தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details