நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 69 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கோவிட் - 19 தற்போதைய நிலவரம்
இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 65 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 54 லட்சத்து 27 ஆயிரத்து 707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 842 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஒரு லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.