இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, “உலகளவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் விகிதம் இந்தியாவில் மிக குறைந்தளவில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எண்ணிக்கை 505.37 மட்டுமே. இதுவே உலகளவில் பார்க்கும்போது அதன் எண்ணிக்கை 1,453.25ஆக உள்ளது.
அதேசமயம் சிலி நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,459.8ஆக உள்ளது. இதுவே பெருவில் 9,070.8, அமெரிக்காவில் 8,560.5, பிரேசிலில் 7,419.1, ஸ்பெயினில் 5,358.7, ரஷ்யாவில் 4,713.5, பிரிட்டனில் 4,204.4, இத்தாலியில் 3,996.1, மெக்சிகோவில் 1,955.8ஆகவும் உள்ளது.
India's COVID-19 cases fatality rate per million population among lowest in world: Govt அதேபோல், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் இப்பெருந்தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.27 ஆக உள்ளது. உலகளவில் அதன் சராசரி நான்கு மடங்கு அதிகரித்து 68.29ஆக உள்ளது.
இதுவே பிரிட்டனில் 651.4, ஸ்பெயினில் 607.1, இத்தாலியில் 576.6, பிரான்ஸில் 456.7, அமெரிக்காவில் 391.0, பெருவில் 315.8, பிரேசிலில் 302.3, மெக்சிகோவில் 235.5 ஆக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
நாட்டில் இன்று காலை நிலவரப்படி, கரோனா வைரஸால் இதுவரை 7,19,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20,160 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 15,515 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை 4,39,947 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது 2,59,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.