இந்தியாவில் சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பாளர்கள் மூவாயிரத்து 320 பேர் புதிதாக கண்டறியப்பட்டனர். இதையடுத்து பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 60 நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 30 விழுக்காடு அதிகரித்து 17 ஆயிரத்து 847 ஆக உள்ளது.
இந்த தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 991 படுக்கைகளைக் கொண்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 843 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 643 தனிமைப்படுத்துதல் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுகளும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் திகழ்கிறது. சிகிச்சைக்கு பின்னர் அதிகளவில் குணமடைந்தோர் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு மருந்து? முழுவீச்சில் களமிறங்கியுள்ள ஐசிஎம்ஆர் - பிபிஐஎல்