தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்து... விரைவில் பரிசோதனை!

ஹைதராபாத்: பாரத் பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி மருந்தை, மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவதற்கான அனுமதியை டிசிஜிஐ (Drug Controller General of India)-யிடம் பெற்றுள்ளது.

covid
covid

By

Published : Jun 29, 2020, 11:23 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸைத் தடுப்பதற்கான பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். வைரஸ் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில், பல நாடுகளின் முன்னணி விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாரத் பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம் கரோனாவுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த DCGI-யிடம் (Drug Controller General of India) அனுமதி பெற்று அசத்தியுள்ளனர்.

பாரத் பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம் 140-க்கும் மேற்பட்ட உலகளாவிய நோயின் காப்புரிமைகளையும், 16-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளையும் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர். குறிப்பாக போலியோ, ரேபிஸ், ரோட்டா வைரஸ், ஜப்பானிய என்செபாலிடிஸ், சிக்குன்குனியா, ஜிகா ஆகிய பல நோய்களுக்கு தடுப்பூசிகளை தயாரித்துள்ளனர்.

அந்த வகையில், உலகை மிரட்டும் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் COVAXIN என்ற தடுப்பூசி மருந்தை, பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தேசிய வைராலஜி நிறுவனத்துடன் (NIV) இணைந்து வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இந்த மருந்தை ஹைதராபாத்தில் ஜீனோம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாரத் பயோடெக்கின் பிஎஸ்எல்-3 தளத்தில் தயாரித்துள்ளனர்.

இந்த மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு உபயோகிக்க Drug Controller General of India அமைப்பிடமும், குடும்ப நல அமைச்சகத்திடமும் அனுமதி பெற்றுள்ளனர். இதற்கான பரிசோதனை இந்தியா முழுவதும் அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் கிருஷ்ணா எலா கூறுகையில், "COVID-19க்கு எதிரான இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டுள்ள COVAXIN மருந்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஐ.சி.எம்.ஆர், என்.ஐ.வி அமைப்புகளின் ஒத்துழைப்பு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

இந்த மருந்தைக் கண்டுபிடிக்க எங்களின் ஆர் & டி, உற்பத்திக் குழுக்கள் அயராது உழைத்தனர்" எனத் தெரிவித்தார்.

உலக நாடுகளே வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்தியாவிலேயே வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிய உத்வேகத்தை மக்களின் மனதில் உருவாக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details