பூடானுக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு சுற்றுலா கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக விதித்து அந்நாடு வசூலித்து வருகிறது. ஆனால், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பூடானுக்குச் செல்லும் இந்தியர்களிடமிருந்து இனி சுற்றுலா கட்டணமாக ஒரு நாளைக்கு 1200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு இந்தியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.