கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில், பிற நாடுகளுக்குச் சென்று திரும்ப முடியாமல் சிக்கிய இந்திய மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தனர். அந்த வகையில் பாகிஸ்தானில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அங்கு சிக்கி, பல இந்தியர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் சிக்கிய 208 இந்தியர்கள் அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி, வாகா பகுதிகள் வழியாக இந்தியா வந்தடைந்தனர்.
இதுவரை இந்தியா திரும்ப 748 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 208 பேர் நேற்று (ஜூன் 27) இந்தியா வந்தடைந்தனர். கரோனா ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பாக இந்த 748 பேரும் பாகிஸ்தான் சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 748 பேரும் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 271 பேர் அத்தாரி, வாகா பகுதிகள் வழியாக இந்தியா வந்தடைந்தனர். தொடர்ந்து அனைவரும் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...வெளிநாடுகளில் சிக்கி தவித்த 518 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!