இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொது மக்கள் பயன்பாடிற்கு வரும் என்று, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பரிசோதனை பணிகள், இந்தியாவில் மூன்றாம் கட்டத்தில் உள்ளன. இப்பரிசோதனையின்போது தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அவற்றின் செயல்திறன், தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை பரிசோதிக்கப்படும்.
இந்தநிலையில், இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவேக்சின், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்தும் தரவுகள் உலக நாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.