கொரோனா நோய்தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், இத்தாலி தலைநகர் ரோம், மிலனுக்கு சில நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்துள்ளது. ஒரு சில விமானங்கள் இயங்கி வருவதாகத் தெரிகிறது. இதையடுத்து, இத்தாலியில் இருக்கும் இந்திய மாணவர்கள் 65 க்கும் மேற்பட்டோர், இந்தியா திரும்புவதற்காக நேற்றிரவு 11.30 மணிக்கு ரோம் விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது, மாணவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்று கேட்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவச் சான்று, மாணவர்களிடம் இல்லாததால் அவர்கள் அனைவருக்கும் போர்டிங் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால், இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாணவர் ஒருவர் தெரிவிக்கையில், "இங்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் நிறைய விதிமுறைகள் அமலில் உள்ளன. அதில், முக்கியமானது மருத்துவச் சான்று. இந்த சான்றினை பெறுவதற்காக மருத்துவமனை சென்றோம்.