கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில பயணிகள் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. ரயிலில் பயணிப்போர் கண்டிப்பாக மத்திய அரசு வெளியிட்ட 'ஆரோக்கிய சேது' செயலியை தரவிறக்கம் செய்திருக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தனர்.