இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று காலை 245 ஆக இருந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் தற்போது 341ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இன்று ஒருநாள் முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
மார்ச் 31 வரை ரயில்கள் ரத்து!
13:08 March 22
நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயிலும் மார்ச் 31ஆம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில்கள் மூலம் வைரஸ் தொற்று பரவலாம் என்பதால் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயிலும் ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, மக்கள் ஊரடங்கு உத்தரவையடுத்து நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை அனைத்து ரயில்களும் ரத்துசெய்யப்பட்டன. இருப்பினும் ஏற்கனவே, பயணித்துவரும் ரயில்கள், அந்தப் பயணத்தை முடிக்கும்வரை இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அனைத்துப் புறநகர் ரயில்களும் ரத்துசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடையை மீறி கோயிலில் திரண்டவர்கள் மீது வழக்குப்பதிவு