ரயில்களை ட்ரேக்கிங் செய்வது இந்திய ரயில்வே துறைக்கு சவாலாக இருந்து வருகிறது. அதை எளிதாக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுடன் இணைந்து புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
அதில், ரீயல் டைம் ரயில் தகவல் அமைப்பு (Real-time Train Information System (RTIS)) என்ற புதிய திட்டத்தின் மூலம் ரயில்களில் மின்சார என்ஜின்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் நேரம், ரயில் புறப்படும் நேரம், ஒவ்வொரு நிலையத்திற்கும் ரயில் பயணிக்கும் இடைவேளை, ரயிலின் வேகம், இருப்பிடம் ஆகிய அனைத்து தகவலையும் எளிதாக பெற முடியும். முதல்கட்டமாக இந்திய ரயில்வேயின் 2,700 மின்சார என்ஜின்களில் ஆர்டிஐஎஸ் (RTIS) பொருத்தப்பட்டுள்ளது.