'இந்தியா குளோபல் வீக் 2020' என்ற மாநாடு காணொலி மூலம் ஜூலை 8ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 30 நாடுகளிலிருந்து 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். 75 அமர்வுகளில் 250 உலகாளாவிய பேச்சாளர்கள் உரையாற்றினர். இதில், முதல் நாளான ஜூலை 8 அன்று பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது, "கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிலையான வாழ்க்கை முறையை அமைப்பது குறித்த அறிவை இந்தியாவிடமிருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் தத்துவங்களும் மதிப்புகளும் ஒரு நிலையான வாழ்க்கை முறையையும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை வலியுறுத்துகின்றன.