தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருநங்கைகளுக்கு உயரடுக்கு துணை ராணுவப்படைகளில் பணிசெய்யும் வாய்ப்பு! - துணை ராணுவப்படை

டெல்லி : பாலின ரீதியாக ஒடுக்கப்படும் திருநங்கை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் உயரடுக்கு துணை ராணுவப் படைகளில் திருநங்கைகளைச் சேர்க்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருநங்கைகளுக்கு உயரடுக்கு துணை ராணுவப்படைகளில் பணிசெய்யும் வாய்ப்பு!
திருநங்கைகளுக்கு உயரடுக்கு துணை ராணுவப்படைகளில் பணிசெய்யும் வாய்ப்பு!

By

Published : Jul 2, 2020, 8:09 PM IST

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்றாம் பாலினமான திருநங்கை சமூகத்தை துணை ராணுவப் படையில் வீரர்களாக நியமிக்கும் திட்டத்தில் அமைச்சகம் தேவையான செயல்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர்களை அலுவலர்களாக, உதவித் தளபதிகளாக நியமிப்பதற்கான நடைமுறைகள் குறித்து அனைத்து மத்திய ஆயுத காவல் படை (சி.ஏ.பி.எஃப்) தலைமையின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் அமைச்சகம் கோரியுள்ளது" என தெரிவித்துள்ளது.

மத்திய ஆயுத காவல் படைகள் (உதவி கமாண்டண்டுகள்) பரீட்சை 2020 - வரைவு விதிகள் தொடர்பான கருத்துகள்" என்ற தலைப்பில் ஜூலை 1ஆம் தேதி சிஏபிஎஃப்-க்கு எழுதிய கடிதத்தில் இந்த விவகாரம் தொடர்பாக படைகளிடமிருந்து பரிந்துரைகளை கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

அந்த கடிதத்தில், "சிஏபிஎஃப் (ஏசி) தேர்வின் விதிகளில் ஆண் / பெண் பாலின பிரிவுடன் திருநங்கை பாலினத்தவரையும் மூன்றாம் பாலினமாக இணைப்பது தொடர்பாக சிஆர்பிஎஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றிடம் கேட்கப்பட்டிருந்த கருத்துகள் இன்னும் பெறப்படவில்லை. இந்த விவகாரத்தில் இறுதிக் கருத்துகளை, ஆலோசனைகளை, மறுபரிசீலனைகளை செய்து 2020 ஜூலை 2 அன்று வழங்க வேண்டும்" என அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறுகையில், "திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, சமீபத்தில் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (2019) மக்களவையில் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஜனவரி 10, 2020 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் 14ஆவது பிரிவின்படி, திருநங்கைகளுக்கு தொழில் பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை எளிதாக்குவதற்கும் ஆதரவாக பொருத்தமான நலத்திட்டங்களை அரசு வகுக்கும். திருநங்கைகளின் நலனுக்காக 2019-2020ஆம் நிதியாண்டில் ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் சேர்க்கைகளில் பட்டியல் சாதிகள் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி), பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (ஈ.டபிள்யூ.எஸ்) போன்றே திருநங்கைகளுக்கும் அனைத்து வகையான இட ஒதுக்கீடு உரிமைகளும் உண்டு.

மேலும், அந்தந்த பிரிவில் அரசு வேலைகளுக்கு சட்டத்தின் 9ஆவது பிரிவின்படி, எந்தவொரு திருநங்கைக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு நிறுவனமும் பாகுபாடு காட்டக் கூடாது. இந்த சட்டம் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேலையில் பிற தொடர்புடைய பிரச்னைகளுக்கும் பொருந்தும்" என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details