மும்பை:இந்திய கப்பற்படையில் ப்ராஜெக்ட் 75-திற்காக 'வாகீர்' எனப் பெயரிடப்பட்டுள்ள 5ஆவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல் இன்று இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காணொலி காட்சி மூலம் கப்பற்படையில் இணைத்தார்.
இந்த வாகீர் நீர் மூழ்கிக் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆறாவது கப்பலாகும். இது பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.