டெல்லி:இந்திய கப்பல் படையின் மிக்-29கே பயிற்சி விமானம், கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று அரேபிய கடல் பகுதி வழியாக பயிற்சி மேற்கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் கமாண்டர் நிஷாந்த் சிங் உட்பட இருவர் காணாமல் போன நிலையில், ஒருவர் மீட்கப்பட்டார்.
விமான விபத்தில் உயிரிழந்த கமாண்டரின் உடலை கண்டுபிடித்த இந்திய கப்பல் படை - விமான விபத்து
மிக்-29கே விமான விபத்தின்போது உயிரிழந்த விமானியின் உடலை, பத்து நாட்களுக்கு பின் இந்திய கப்பல் படை மீட்டுள்ளது.
இந்திய கப்பற்படை
இதனைத் தொடர்ந்து காண்ஆமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த தேடுதலில் விமானி கமாண்டர் நிஷாந்த் சிங்கின் உடல் கோவா கடற்கரையிலிருந்து 30 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அசாமில் விபத்துக்குள்ளான பாதுகாப்பு படை விமானம்!