இந்திய- சீன எல்லைத் தகராறு குறித்து மக்களவையில் பேசிய ராஜ்நாத் சிங், “இருநாட்டு எல்லைத் தகராறுகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எல்லைகளைப் பாதுகாக்கும் நமது ராணுவத்துடன் தோளோடு தோள் நிற்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற இந்த அவையை கேட்டுக்கொள்கிறேன்.
எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங் - நாடாளுமன்ற கூட்டுத்தொடர்
டெல்லி: இந்திய-சீன எல்லைப் பதற்றங்கள் தொடர்பாக எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாடு தயாராக இருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
![எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங் 'Indian forces are determined to protect security, sovereignty of country'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:30:51:1600167651-8809108-139-8809108-1600164268058.jpg)
'Indian forces are determined to protect security, sovereignty of country'
இதுவரை, ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மேலும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.