தமிழ்நாடு

tamil nadu

ஏமன் நாட்டு கடலில் தத்தளித்த 9 இந்திய மீனவர்கள் மீட்பு.!

கொச்சி : ஏமன் நாட்டு கடலில் தத்தளித்த 7 தமிழக மீனவர்கள் உள்பட 9 இந்திய மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

By

Published : Dec 1, 2019, 10:32 PM IST

Published : Dec 1, 2019, 10:32 PM IST

Indian fishermen who pulled off Yemen sea escape reunite with families
Indian fishermen who pulled off Yemen sea escape reunite with families

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர், கேரளத்தை சேர்ந்த 2 பேர் என 9 மீனவர்கள் அரபு நாடான ஏமனில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வரும் போது கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர். இந்த தகவல் கன்னியாகுமரியை சேர்ந்த தொண்டு நிறுவனம் வாயிலாக இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து செயல்பட்டு நடுக்கடலில் தத்தளித்த 9மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 27ஆம் தேதி (நவம்பர்) குமரி மீனவர் ஒருவர் தனது மனைவியை தொடர்புக் கொண்டு லட்சத்தீவில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அவர் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்.இதையடுத்து அந்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்க மீனவர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details