தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14.5 கோடியை நெருங்கும் இந்திய கரோனா பரிசோதனை - கரோனா பரிசோதனையின் எண்ணிக்கை

இந்தியாவில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 14.50 கோடியை நெருங்கவுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Indian corona test approaching 14.5 crore
Indian corona test approaching 14.5 crore

By

Published : Dec 4, 2020, 10:56 AM IST

டெல்லி:இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்தாலும், நாட்டில் மீண்டும் தொற்று பரவிவருவதாக கூறுகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த அதிகப்படியான மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட மக்களை பொதுமக்களிடமிருந்து பிரித்து உரிய சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஐசிஎம்ஆர் ஈடுபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவருகிறது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை

இந்நிலையில், நேற்றுவரை (டிச. 03) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை விவரங்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 14 கோடியே 47 லட்சத்து 27 ஆயிரத்து 749 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் நேற்று ஒரேநாளில் 11 லட்சத்து 70 ஆயிரத்து 102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய சீரம் நிறுவனத்தில் தடுப்பூசி பரிசோதனை தொடரும் - சுகாதார அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details