தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்மிருதி கெத்து வெற்றி... பிரகாஷ்ராஜ் தோல்வி..! - பிரபலங்களின் நிலவரம் - 2019

மக்களின் மனதில் இடம்பிடித்த இந்திய நடிகர்கள், நடிகைகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி கண்டுள்ளனர்.

ஸ்மிருதி

By

Published : May 23, 2019, 9:31 PM IST

Updated : May 23, 2019, 9:37 PM IST

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் அரசியல் தலைவர்களை தாண்டி சினிமா நடிகர்களும் மக்களவைத் தேர்தலில் மாநில, தேசிய கட்சிகளில் இணைந்தும் ஒரு சிலர் சுயேட்சையாகவும் களம் கண்டனர்.

இதில், நடிகர்களான மன்சூர் அலிகான், பிரகாஷ் ராஜ், சன்னி தியோல், சத்ருகன் சின்ஹா, ரவி கிஷன், நிகில் கெளடா மற்றும் நடிகைகளான ஹேமமாலினி, ஜெயப்ரதா, ஸ்மிருதி ராணி, ஊர்மிளா மடோன்கர், சுமலதா அம்பரீஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

பிரகாஷ் ராஜ்:
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலைக்கு பிறகு பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர் பிரகாஷ் ராஜ். அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் பாஜக செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறியதில்லை. மேடை பேச்சுக்களில் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். இவர் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பிரகாஷ் ராஜ், 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

, பிரகாஷ் ராஜ்

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே, 'இன்று என் முகத்தில் பளார் என்று அறை விழுந்துள்ளது. இனி என் மீது விமர்சனங்களும், கேலிப்பேச்சுக்களும் எழக்கூடும். இதற்காக நான் கலங்கமாட்டேன். எனது எதிர்ப்பு பணியை தொடர்ந்து பயணிப்பேன். மதச்சார்பற்ற இந்தியாவிற்காக எனது குரல் ஒலிக்கும். மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்' என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான்:

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன் போன்ற முகம் இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்து வருகிறார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வேட்பாளராக தேர்தல் பரப்புரையோடு நின்று விடாமல் மக்களோடு மக்களாக நின்று பல பணிகளை செய்து திண்டுக்கள் மக்களிடையே பிரபலமானார்.

மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியில் 52,729 வாக்குகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளார். மக்களுக்கு டீ போட்டு கொடுத்து, விறகு விற்று, இளநீர் விற்பனை செய்து வியர்வை சிந்தி இந்த வாக்குகளை பெற்றுள்ளார். தோல்வி அடைந்தாலும் இந்த வாக்கு அவரது பெயரை நிலைப்பெறச் செய்யும்.

சன்னி தியோல்

இந்தி நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக சார்பில் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிலையில் இருந்தே முன்னிலையில் இருக்கும் இவர், ஐந்து லட்சத்து 51 ஆயிரத்து 117 வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி வாய்ப்பை பெறும் தருவாயில் இருக்கிறார்.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

பிரபல பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா 30 வருடங்களாக பாஜகவில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தார். மோடியையும், அமித்ஷாவையும் வெளிப்படையாக விமர்சித்து பேசியுள்ளார். இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில் மூன்று லட்சத்து 21,545 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தையாவார்.

ஜெயப்ரதா:

ஜெயப்ரதா
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். நடிகை என்ற அடையாளத்துடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். நான்கு லட்சத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று தோல்வியுறும் நிலையில் உள்ளார். பாஜகவில் இணைந்த பிறகு பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


ஸ்மிருதி ராணி:
ஸ்மிருதி ராணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகை. பாஜகவில் முக்கிய ஆளுமை நிறைந்த பெண்ணாக வளர்ந்துள்ளார். எதிர்க்கட்சிகளை பாரபட்சமின்றி விமர்சிக்கக் கூடியவர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஸ்ருமிதி ராணியின் கேள்விகளுக்க பதில் சொல்ல தயங்குவார்கள். பெண் என்பதையும் தாண்டி பாஜகவில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார். பாஜகவில் முக்கிய பேச்சாளரும் கூட.

ஸ்மிருதி ராணி

உத்தரப்பிரதேச அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று சாதித்து காட்டியுள்ளார். ராகுல் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியை கைப்பற்றி தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார். தற்பொழுது இந்திய மக்களின் பேச்சு இவரைப் பற்றித்தான். ராகுல் காந்தியை தோற்கடித்து கம்பீரமான வெற்றியை பெற்றுவிட்டார்.

Last Updated : May 23, 2019, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details