கர்நாடக மாநிலம் பலால் பாக் அருகேயுள்ள பகுதியில் காட்டெருமை ஒன்று இன்று காலை ஆறு மணியளவில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காட்டெருமை உலா வருவதை வீடியோ, புகைப்படம் எடுத்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசியைச் செலுத்தி காட்டெருமையைப் பிடித்தனர்.