கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். இதையடுத்து, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவத் தலைமையகம் (HQ), ராணுவ செயல்பாடுகள், ராணுவ புலனாய்வு (Military Intelligence), போர்த்திறன் சார்ந்த இயக்கக் மையங்கள் மட்டுமே செயல்படும். இருப்பினும், இங்கு பணிபுரியும் ஆள்களின் எண்ணிக்கையும், வேலை நேரமும் குறைக்கப்படும்.
மீதமுள்ள ராணுவ கிளைகளில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள். இந்த உத்தரவு ஏப்ரல் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பின்னர், ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை, அனைத்து ராணுவ துறைகளில் 50 விழுக்காடு ஆள்களுடன் பணி நடைபெறும்.