இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி நுழைந்துவருகிறது. அதனால் அவ்வப்போது எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, இந்த பிரச்னை குறித்து சீன - இந்திய ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப். 3) வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17ஆயிரத்து 500 அடி உயரத்தில் வழி மாறிப்போன சீன நாட்டினர் மூன்று பேரை, இந்திய ராணுவத்தினர் மீட்டனர். குளிரால் பாதிக்கப்பட்ட அந்த சீனர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.