பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி அத்துமீறிய தாக்குதல், பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிற்குள் ஆயுதங்களையும் கடத்தி வரும் முயற்சியும் நடைபெறுகின்றன.
இந்த சதித்திட்டங்களை எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ பாதுகாப்பு படையினர் திறமையாக கையாண்டு தடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலிருந்து ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளது.