கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதற்காக, சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ரேபிட் கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், அவை சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனால், நோய் கண்டறியும் உபகரணங்களின் தயாரிப்பை இந்தியா மே மாதத்திற்குள் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நோய் கண்டறியும் உபகரணங்களின் தயாரிப்பு இந்தியாவில் மே மாதத்திற்குள் தொடங்கும். இதன் மூலம் நாடு தன்னிறைவு அடையும்" என்றார்.
உயிரி தொழில்நுட்பத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், "நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த இலக்கை மே 31ஆம் தேதி அடைய வேண்டும். 26 ஆண்டுகளுக்கு முன்பு போலியோவை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் எனக்கு இதன் மூலம் நியாபகம் வருகிறது. போலியோவை ஒழிக்க genetic sequencing என்ற முறை கையாளப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் பயண விவரங்களை கொண்டு போலியோவை ஒழிக்க முயற்சி மேற்கொண்டோம். இம்முறையும் இதே முறை கையாளப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: சுனாமியை உண்டாக்கும் சிறுகோள், பூமியை தாக்கினால் நாடுகள் அழியும்!