இந்து புனித யாத்திரையாகக் கருதப்படும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களின் பயண தூரத்தை சுருக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலே வரை 80 கி.மீ. நீளத்திற்குப் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே மாதம் திறந்துவைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நேபாள அரசு லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபட திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இது இந்திய - நேபாள உறவுகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள உறவு மிகவும் ஆழமானது. எந்த அந்நிய சக்திகளாலும் இந்த உறவில் பிளவுகளை ஏற்படுத்த முடியாது.