தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனாவுக்குப் பிறகான உலகை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்' - பிரதமர் மோடி - மோடி

டெல்லி: சமூக, பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததற்கு வரலாற்றுச் சான்று உள்ளதால், கரோனாவுக்குப் பிறகான உலகத்தை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Jul 9, 2020, 4:30 PM IST

'இந்தியா குளோபல் வீக் 2020' என்ற மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 30 நாடுகளிலிருந்து 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 அமர்வுகளில் 250 உலகாளாவிய பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.

இதில், பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். சமூக, பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததற்கு வரலாற்றுச் சான்றுள்ளதாகக் கூறிய அவர். "திறமை வாய்ந்தவர்களின் மையமாக இந்தியா உள்ளது. கரோனாவுக்குப் பிறகான உலகத்தை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுபோன்ற சூழலில் மறுமலர்ச்சி குறித்துப் பேசுவது வழக்கமான ஒன்று. உலக மறுமலர்ச்சியுடன் இந்தியாவை இணைத்துப் பேசுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்தியர்கள் இயற்கையான சீர்திருத்தவாதிகள்.

சமூக, பொருளாதார சவால்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததற்கு வரலாற்றுச் சான்று உள்ளது. ஒரு முனையில், பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போரிட்டுவருகிறது. மக்களின் உடல்நலத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதே அளவு பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

திறமை வாய்ந்த இந்தியர்களின் பங்கினை அனைவரும் அறிவர். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், அதன் பணியாளர்களையும் யாரால் மறக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாகவே அவர்கள் வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: சீன விவகாரம்: அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details