கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு அளிக்கப்படும் ’ஹைட்ரோகுளோரோகுயின்’ என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரைத்தது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்தது.
உலகத்திலேயே இந்த மருந்தை அதிகளவில் தயாரிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, இந்தத் தடையை திரும்பப் பெற கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. மேலும் இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக மிரட்டும் தொனியிலும் பேசியிருந்தார்.