தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து- ஹர்ஷ் வர்தன் - Harsh Vardhan

லக்னோ : கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Harsh Vardhan
Harsh Vardhan

By

Published : Aug 23, 2020, 9:28 AM IST

Updated : Aug 23, 2020, 9:36 AM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பிலும் சில மருத்துவ நிறுவனங்கள் கரோனா ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்தன், "இந்தியாவில் ஆராய்ச்சியில் உள்ள ஒரு கரோனா தடுப்பு மருந்து, தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்படும் என்று நம்புகிறோம்.

எட்டு மாதங்களாக நடைபெறும் இந்த கரோனா யுத்தத்தில், இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 75 விழுக்காடுடன் சிறப்பாக உள்ளது. இதுவரை 22 லட்சம் பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ஏழு லட்சம் பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைய உள்ளனர்.

முதலில் புனேவில் மட்டுமே கரோனா தொற்று கண்டறியும் மையம் இருந்தது. ஆனால், தற்போது கரோனா பரிசோதனைகளின் அளவை நாம் அதிகப்படுத்தியுள்ளோம். நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட கரோனா கண்டறியும் நிலையங்கள் தற்போது உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியாவில் சனிக்கிழமை மட்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 63,631 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.69 விழுக்காடாக தற்போது உள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்

Last Updated : Aug 23, 2020, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details