தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோவிலை கட்டினால் கரோனா முற்றிலுமாக நமது நாட்டிலிருந்து ஒழிந்துவிடும் - பாஜக எம்பி

ஜெய்ப்பூர் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டவுடன் கரோனா வைரஸ் நாட்டிலிருந்து முழுமையாக காணாமல் போகும் என்று ராஜஸ்தான் பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்கவுர் மீனா கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலை கட்டினால் கரோனா முற்றிலுமாக நமது நாட்டிலிருந்து ஒழிந்துவிடும் - பாஜக பெண் எம்.பி.,
அயோத்தி ராமர் கோவிலை கட்டினால் கரோனா முற்றிலுமாக நமது நாட்டிலிருந்து ஒழிந்துவிடும் - பாஜக பெண் எம்.பி.,

By

Published : Jul 28, 2020, 10:41 PM IST

தவுசா மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த உரையாற்றி அவர், "இந்திய மக்களான நாங்கள் ஆன்மீக ஆற்றல்களின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்து தர்மக் கொள்கைகளின்படி செயல்படுகிறோம்.

ஸ்ரீராம பிரானுக்கு அவர் அவதரித்த புண்ணியஸ்தலமான ஜென்மபூமி அயோத்தியில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கான இத்தனை ஆண்டு கால காத்திருப்பும், ஆன்மீகப் போராட்டமும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அதன் அடித்தளத்திற்கான 'பூமி-பூஜை'யில் முற்றுப்பெறப்போகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாங்கள் அங்கு செல்ல முடியாவிட்டாமலும் விளக்குகளை ஏற்றி இனிப்புகளை விநியோகிப்பதன் மூலம் இந்த நிகழ்வைக் கொண்டாட உள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சிறந்த ராம பக்தி இதனை சாத்தியப்படுத்தி உள்ளது.

புராணக் கதைகளில் வரும் அவதாரங்களைப் போலவே இந்த இரு தலைவர்களும் நிபந்தனையின்றி பொது நலனுக்காக செயல்படுகின்றனர், கடுமையாக உழைக்கின்றனர்.

அரசின் கொள்கைகளை பொது நலனுக்கு மட்டுமே மறுவடிவமைப்பிற்குள் கொண்டுவந்து ராமராஜ்ஜியத்தை நடத்தி்வருகின்றனர். அவர்களின் அத்தகைய உணர்வால் தான் இன்று ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. கோவில் கட்டப்பட்டவுடன் கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும்" என்றார்.

முன்னதாக இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "கோவிலைக் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸ் பாதிப்பைத் தணிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நமது முன்னுரிமை ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக, மாநில மற்றும் மத்திய அரசிடம் கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details