தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஊரடங்கு தொடர்ந்தால் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும்' - நாட்டின் பொருளாதார நிலை

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகி ஆபத்து அதிகரிக்கும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எச்சரித்துள்ளார்.

India will be risking economic hara-kiri, if lockdown extended for much longer: Mahindra
ஊரடங்கு தொடர்ந்தால் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும் - ஆனந்த் மஹிந்திரா

By

Published : May 12, 2020, 1:23 PM IST

இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் கரோனாவைத் தடுக்க மே 17ஆம் தேதிவரை, முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும், தீநுண்மி தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க, மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு - குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அதனை மேலும் நீட்டிப்புச் செய்தால் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்குக் கடுமையான சிரமங்களை ஏற்படுத்தும். இந்தியா தனது கூட்டுப் போராட்டத்தின் மூலமாக, ஏற்படவிருந்த லட்சக்கணக்கான மக்களின் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

உலகளவில் மதிப்பிடப்பட்டதுபோல 10 லட்சம் மக்களின் இறப்பு நமது கூட்டு முயற்சியால் தவிர்க்கப்பட்டது. இந்தியாவின் இறப்பு விகிதம் தற்போது உலக சராசரியுடன் ஒப்பிடும்போது 35.

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நேரத்தையும் நாம் பெற்றுள்ளோம். ஆனால், தொடர்ந்து ஊரடங்கு நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடையும் ஆபத்தை நாம் கவனிக்க வேண்டும்.

வளர்ந்துவரும் நாட்டிற்குப் பொருளாதாரம் என்பது வாழ்வாதாரங்களுக்கான நோயெதிர்ப்பு போன்றது. ஊரடங்கு அந்த நோயெதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால், நம் சமூகத்தில் வாழும் வறியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு தொடர்ந்தால் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும் - ஆனந்த் மஹிந்திரா

தவிர்க்கக்கூடிய மரணங்களைத் தொடர்ந்து தடுப்பதே நாட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வெகுமக்கள் எளிதில் அணுகும் வகையிலான பல மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

பரவலான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தவிர, கவனம் செலுத்துதல் மண்டலங்கள் வழியாக அல்ல, வட்டங்களில் இருக்க வேண்டும். இறுதியாக, சமூகத்தின் முதியவர்களையும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளையும் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :வேகமாகப் பரவும் கரோனா: ம.பி.யில் பாதிப்பு 3,785

ABOUT THE AUTHOR

...view details