தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு என்றென்றும் நேதாஜிக்கு நன்றியுடன் இருக்கும்: நரேந்திர மோடி - நேதாஜி ஜெயந்தி

டெல்லி: நாடு என்றென்றும் நேதாஜிக்கு நன்றியுடன் இருக்கும் என அவரது 123ஆவது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

India will always remain grateful to Netaji: Modi
India will always remain grateful to Netaji: Modi

By

Published : Jan 23, 2020, 7:19 PM IST

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123ஆவது ஜெயந்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் காணொலிக்காட்சியொன்றை பதிவேற்றி, நாடு என்றென்றும் நேதாஜிக்கு நன்றியுடன் இருக்கும் என அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அந்தக் காணொலிக் காட்சி 1.55 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை பட்டியலிட்டு, நாட்டில் சுதந்திரம் பெறுவதற்கான அவரின் பங்களிப்பை நினைவுக் கூர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் செய்தியில், “காலனித்துவத்தை எதிர்ப்பதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் துணிச்சலுக்கும் அழியாத பங்களிப்பிற்கும் இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். நேதாஜி தனது சக இந்தியர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் நின்றார்” என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி பிறந்த போது அவரது தந்தை வழக்குரைஞர் ஜானகிநாத் போஸ் எழுதிய டைரி குறிப்பொன்றையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அது 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜானகிநாத் போஸால் எழுதப்பட்ட அந்த குறிப்பில், “எனக்கொரு மகன் மதிய வேளையில் பிறந்துள்ளான்” என கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “அந்த மகன் தேச விடுதலைக்காக பாடுபட்டவர். மாபெரும் சிந்தனையாளர். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தவர். அவரது பிறந்த தினத்தில் அவரை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜப்பானில் இருக்கும் நேதாஜி குறித்த முக்கியமான கோப்புகள் பெறுக! சிகே போஸ்

ABOUT THE AUTHOR

...view details